கிரீன்லாந்தில் கனடா தூதரகத்தைத் திறந்தது! பிரான்சும் திறக்கிறது!
டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை எடுத்துக்கொள்வதாக அமெரிக்கா அச்சுறுத்தல் விடுத்த நிலையில் கனடாவும் பிரான்சும் ஆர்க்டிக் தீவில் புதிய தூதரகங்களைத் திறக்கின்றன.
அத்துடன் கனடாவும் மற்றும் பிரான்சும் ஆர்க்டிக் பாதுகாப்பை அதிகரிக்க விரும்புவதாகக் கூறுகின்றன.
டென்மார்க் மற்றும் அரை தன்னாட்சி பெற்ற டென்மார்க் பிரதேசமான கிரீன்லாந்துக்கு அமெரிக்காவிடமிருந்து தொடர்ச்சியான மற்றும் ஆக்கிரோஷமான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதால் அதற்கான ஆதரவைக் குறிக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த், நூக்கில் ஒட்டாவாவின் துணைத் தூதரகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.
கிரீன்லாந்தில் உள்ள கனடியர்களுக்கு தூதரக சேவைகளை இந்த தூதரகம் வழங்கும், அத்துடன் கனடா-கிரீன்லாந்து இருதரப்பு மற்றும் வணிக
உறவுகளை வலுப்படுத்தும், மக்களிடையேயான உறவுகள் மற்றும் இயக்கம் ஆகியவற்றை வளர்க்கும் மற்றும் ஆர்க்டிக் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பில் ஒத்துழைப்பை மேம்படுத்தும்" என்று கனடாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.கிரீன்லாந்தில் தூதரகத்தைத் திறந்த முதல் ஐரோப்பிய ஒன்றிய நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.
கிரீன்லாந்தில் திறக்கப்பட்ட முதல் பிரான்சின் புதிய துணைத் தூதரகத்தை, வரும் வாரங்களுக்குள் அதன் வெளியுறவு அமைச்சர் பார்வையிடுவார் என்று பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
டென்மார்க் இராச்சியத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதில் பிரான்ஸ் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது என்று பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் வியட்நாமிற்கும் பின்னர் லிபியாவிற்கும் தூதராகப் பணியாற்றிய ஜீன்- நோயல் பொய்ரியரை பிரான்ஸ் தனது புதிய தூதர் ஜெனரலாக நியமித்தது. அவர் வெள்ளிக்கிழமை நூக்கிற்கு வந்தார்.



Post a Comment